சீன ஊடகக் குழுமம், ஜியாங்சூ மாநில அரசு ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், 2026 சீனச் சர்வதேச நுண்ணறிவு தொடர்பு கருத்தரங்கு நவம்பர் 9ஆம் நாள் ஜியாங்சூவின் வூஷி நகரில் நடைபெற்றது. சீன ஊடகக் குழுமத்தின் துணைத் தலைவர் யூ ஜுன்ஷெங், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் துணை தலைமை செயலாளர் ஒலெக் கோபிலொவ்(Oleg Kopylov) உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கின் முக்கிய சாதனையாக சீனச் சர்வதேச நுண்ணறிவு தொடர்பு கருத்தரங்கு பற்றிய வூஷி முன்னெடுப்பு வெளியிடப்பட்டது. இதில், தொழில்நுட்பம் நன்மைக்குப் பயன்பட வேண்டும், ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும், நாகரிகங்களிடையே பரஸ்பர கற்றலை வலுப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நடப்பு கருத்தரங்கின் போது, 2026 டிஜிட்டல் கலாசாரத்தின் வெளிநாட்டுப் பரவல் கருத்தரங்கு, ஏஐஜிசி டிஜிட்டல் மற்றும் நுண்ணறிவு தொழில் கருத்தரங்கு, வூஷியில் வெளிநாட்டு ஊடகங்களின் பயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளன.
