
சிவகாசி தொகுதி தவெக எம்எல்ஏவும், தொழில்துறை அமைச் சருமான கீர்த்தனா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து வீடியோவில், பேன்சி ரக பட்டாசை கையில் வைத்து வெடிக்கும் காட்சியை பதிவிட்டிருந்தார்.
அவர் கையில் வைத்து வெடிக்கும் பட்டாசை குறிப்பிட்டு, சீன பட்டாசு வெடித்து அமைச்சர் தீபாவளி கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘அமைச்சர் கீர்த்தனா வெடித்த பட்டாசில் வஜ்ரா என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுபோன்ற பட்டாசுகள் சிவகாசி பகுதியில் உள்ள ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஆனால் அது சீன பட்டாசா என உறுதியாகத் தெரியவில்லை’ என்றனர்.
