பொங்கல் சிறப்பு ரயில் முன்பதிவு தேதிகள் அறிவிப்பு..!!

Estimated read time 1 min read

பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைக் காலங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தீபாவளிப் பண்டிகைக்கான முன்பதிவு நடைபெற்றபோது இணையதள சர்வரில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஏராளமான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

எனவே, பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவின்போது இணையதளத்தில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாத வகையில் ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில் டிக்கெட் முன்பதிவை பயணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பே மேற்கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 12-ம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு நவம்பர் 13-ம் தேதியும், ஜனவரி 13-ம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு நவம்பர் 14-ம் தேதியும் தொடங்குகின்றன.

இதேபோல், போகிப் பண்டிகையான ஜனவரி 14-ம் தேதி பயணம் செய்வதற்கு நவம்பர் 15-ம் தேதியும், தைப்பொங்கல் நாளான ஜனவரி 15-ம் தேதி பயணம் செய்வதற்கு நவம்பர் 16-ம் தேதியும் முன்பதிவு நடைபெறுகிறது.

பண்டிகை முடிந்து சொந்த ஊர்களிலிருந்து திரும்புவதற்காக ஜனவரி 17-ம் தேதி பயணம் செய்ய நவம்பர் 18-ம் தேதியும், ஜனவரி 18-ம் தேதி பயணம் செய்ய நவம்பர் 19-ம் தேதியும், ஜனவரி 19-ம் தேதி பயணம் செய்ய நவம்பர் 20-ம் தேதியும் முன்பதிவு தொடங்குகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author