சிஆர்பிஎஃப் முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 3 வீரர்கள் காயம்

Estimated read time 1 min read

ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 வீரர்கள் காயமடைந்த நிலையில், சம்பவம் குறித்த பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீர், குல்காம் மாவட்டம் மிர்பஜார் அருகே உள்ள அக்ரான் சிஆர்பிஎஃப் முகாம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். வெறும் 15 வினாடிகளில் சுமார் 30 ரவுண்டுகள் சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் மூன்று வீரர்கள் காயமடைந்தனர். பின்னர் மூவரும் மீட்கப்பட்டு அனந்த்நாக்கில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மூவரும் அபாய கட்டத்தைத் தாண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author