உலகத்திற்குப் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும் சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி

9ஆவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி 10ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நிறைவடைந்தது. 15ஆவது ஐந்தாண்டு திட்ட காலகட்டத்தில், சீனா கொண்டு வரும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை பயன்படுத்தி, சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியின் வெளிநாட்டுத் திறப்பு நலன்களைக் கூட்டகப் பகிர்ந்துகொள்வது, பல வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்த கருத்துகளாக மாறியுள்ளது.

உலகின் 2ஆவது பெரிய நுகர்வு மற்றும் இறக்குமதிச் சந்தையாக திகழும் சீனா, தேசிய நிலை சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியை நடத்தி, உலகத்திற்குத் தன் சொந்த சந்தையைத் தொடர்ந்து திறந்து வரும் வளரும் நாடாக விளங்குகின்றது.

சீனா கொண்டு வரும் வளர்ச்சி வாய்ப்புகளின் 2.0 யுகத்தில் சந்தை இலாபம் மட்டுமல்லாமல், புத்தாக்க இலாபமும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு நிறுவனங்களைப் பொருத்தவரை, சீனாவின் புத்தாக்க ஆற்றலானது தொடர்ந்து மேம்பட்டு வருவதோடு, மேலதிகமான புத்தாக்கம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளையும் கொண்டு வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், டைனஸ், ஸ்னைடர் எலக்ட்ரிக், ஜான்சன் முதலிய வெளிநாட்டு நிறுவனங்கள் தத்தமது ஆய்வு மையங்கள், பிராந்திய தலைமையகம் மற்றும் முன்னேறிய தயாரிப்பு தளங்களைச் சீனாவில் நிறுவியுள்ளன.

சர்வதேச நிலைமை சிக்கலாக மாறி வரும் பின்னணியில், இப்பொருட்காட்சியின் மூலம் பெறப்பட்டுள்ள திறப்பு மற்றும் ஒத்துழைப்புகள் மிகவும் அரிதானவைகளாக உள்ளன. குறிப்பாக, இப்பொருட்காட்சியானது உலகளாவிய தெற்கு நாடுகள், சீனச் சந்தையுடன் வளர்ச்சி வாய்ப்புகளைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்வதற்குரிய மேடையாகத்  திகழ்கிறது. வளர்ச்சி குன்றிய நாடுகள் இப்பொருட்காட்சியில் இலவசமான காட்சி இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இத்தகைய இலவசமான காட்சி இடங்களின் நிலப்பரப்பு, கடந்த ஆண்டை விட 17 விழுக்காடு அதிகமாகும். இப்பொருட்காட்சின் மூலம் உலக வர்த்தகத்திற்கான சீனாவின் திறப்பு அறிகுறி மேலதிகமாக வெளிக்காட்டப்பட்டுள்ளதாக ஜிம்பாப்வேவின் தி ஹெரால்டு நாளேடு தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author