தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோனைச் சந்தித்த லிச்சியாங்

சீன தலைமையமைச்சர் லிச்சியாங் நவம்பர் 14ஆம் நாள் பாங்காகில் தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோனைச் சந்தித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் வாழ்த்துக்களை மன்னர் வஜிரலோங்கோனுக்கு லிச்சியாங் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கடந்த ஆண்டு, மன்னர் வஜிரலோங்கோன் சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது இரு தலைவர்கள் இரு நாட்டுப் பொது எதிர்காலச் சமூகக் கட்டுமானத்தை முன்னேற்றுவது பற்றி முக்கிய பொது கருத்துக்களை எட்டியுள்ளனர். சீனா தாய்லாந்துடன் இணைந்து, இரு நாட்டு தலைவர்களின் நெடுநோக்கு வழிக்காட்டலைப் பின்பற்றி, நெருங்கிய பரிமாற்றத்தை மேற்கொண்டு, முதலீடு, அறிவியல் தொழில் நுட்பம், புத்தாக்கம், புதிய எரியாற்றல் வாகனங்கள் முதலிய துறைகளிலான ஒத்துழைப்புகளை விரிவாக்கி, இரு நாட்டு பொருளாதார மற்றும் சமூகத்துக்கு ஆதரவளித்து, இரு நாட்டு மக்களின் நலன்களை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

வஜிரலோங்கோன் கூறுகையில், லிச்சியாங்கின் இப்பயணம், இரு நாட்டு பாரம்பரிய நட்புறவை மேலும் முன்னேற்றி, இரு நாட்டுப் பயனுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்குத் துணைப் புரியும் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author