ஆசியான் தலைமைச் செயலாளர் காவ் கிம் ஹவுர்ன் அண்மையில் சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.எனுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், நிலவியலில், ஆசியான், தெற்கிழக்காசியா மற்றும் சீனா எப்போதும் அண்டை பிரதேசங்களாகும். அதனால், நாங்கள் கூட்டு விருப்பம், இலக்கு மற்றும் எதிர்காலத்தைக் கொண்டுள்ளோம். பிரதேச அமைதி மற்றும் நிதானத்துக்காக நாம் கூட்டாகச் செயல்பட்டு, செழுமையை இடைவிடாமல் அதிகரித்து, மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை வழங்குகிறோம் என்று தெரிவித்தார். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த பல முன்மொழிவுகள், சர்வதேச சமூக நலனுக்கு முக்கிய பங்கு ஆற்றுவது உறுதி என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஷிச்சின்பிங்கின் முன்மொழிவுகள் சர்வதேச சமூகத்துக்கு முக்கிய பங்கு: ஆசியான் தலைமைச் செயலாளர்
Estimated read time
0 min read
