சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும், அரசுத்தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் எழுதிய ஆசிய பசிபிக்கின் பொதுவான எதிர்காலச் சமூகத்தைக் கூட்டாகக் கட்டியமைப்போம் என்ற கட்டுரை சியூ சி இதழில் 16ஆம் நாள் வெளியிடப்படவுள்ளது. 2013ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2025ஆம் ஆண்டு நவம்பர் வரை ஷி ச்சின்பிங் வெளியிட்ட முக்கிய கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும்.
இதில் ஆசிய பசிபிக் பிரதேசத்திலுள்ள பல்வேறு பொருளாதாரங்கள் பொதுவான நலன்களைக் கொண்டுள்ளன என்று சுட்டிக்காட்டிய அவர், ஏபெக் அமைப்பின் உருவாக்கமும் வளர்ச்சியும் இப்பிரதேசத்தின் மேம்பாட்டுக்கும் செழுமைக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது என்று தெரிவித்தார்.
பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்துக்கான உந்து சக்தியாக ஆசிய பசிபிக் பிரதேசம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
அமைதி இலக்குடன் வளர்ச்சிப் பாதையில் சீனா உறுதியாக நடைப் போடுகின்றது. சொந்த நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதுடன் சீனா ஆசிய பசிபிக் நாடுகளின் கூட்டு வளர்ச்சிக்கும் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றி வருகின்றது. இப்பிரதேச மக்களுக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்க சீனா பாடுபட்டு, பல்வேறு தரப்புகளுடன் இணைந்து ஆசிய பசிபிக்கின் பொதுவான எதிர்காலச் சமூகத்தைக் கூட்டாகக் கட்டியமைக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
