“ஒரே மேடையில் விஜய் – கர்நாடக முதல்வர்!” – டெல்லியில் மேகதாது அணை குறித்து பேச வாய்ப்பு?

Estimated read time 1 min read

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள Belonging: A Journey of Love என்ற நூலின் வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஹோட்டலில் இன்று (நவம்பர் 16) நடைபெறுகிறது.இந்த விழாவில் பங்கேற்க சோனியா காந்தி விஜய்க்கு அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வருகின்றன.

இந்த அழைப்பை ஏற்று இன்று பிற்பகல் டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய். இதையொட்டி தனது கார்மூலம் விமான நிலையம் சென்ற அவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி கிளம்பினார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து, இன்று (நவம்பர் 16) மதியம் தனி விமானத்தில் டில்லிக்கு முதல்வர் விஜய் புறப்பட்டு சென்றார். மாலை 6 மணிக்கு டில்லி நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் காங்., மூத்த தலைவர் சோனியாவின், புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார். காங்கிரஸ் தலைவர் கார்கே, காங்கிரஸ் எம்பிக்கள் பிரியங்கா, ராகுல், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். கர்நாடகா முதல்வர் விழாவில் கலந்து கொள்ள இருப்பதால் அவரிடம் முதல்வர் விஜய் மேகதாது அணை விவகாரம் குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று இரவு 11 மணிக்கு முதல்வர் விஜய் சென்னை திரும்புகிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author