சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் நவம்பர் 16ஆம் நாள், பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில், 29ஆவது சீன-ஆசியான் தலைவர்கள் கூட்டத்தில் பங்கெடுத்தார்.
இதில், சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலம்-3.0 மேம்பாட்டு உடன்படிக்கை, 2026ஆம் ஆண்டின் டிசம்பர் 1ஆம் நாள் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டதோடு, 2027ஆம் ஆண்டு, சீன-ஆசியான் ஏ.ஐ ஒத்துழைப்பு ஆண்டாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சீன-ஆசியான் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 5ஆவது ஆண்டு நிறைவு, எரியாற்றல் ஒத்துழைப்புக் கூட்டாளியுறவு கட்டுமானம் உள்ளிட்ட சாதனை ஆவணங்களும் இதில் வெளியிடப்பட்டன.
லீச்சியாங் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் இரு தரப்பும் ஒன்றுக்கு ஒன்று நட்பாக உதவி செய்யும் பாரம்பரியத்தை வெளிகொணர்ந்து, வெளிநாட்டுத் திறப்பு மற்றும் கூட்டு வெற்றி கொள்கையைக் கடைப்பிடித்து, புத்தாக்க வளர்ச்சியின் போக்கிற்கு இணங்க செயல்பட்டு வருகின்றன. தற்போது, இரு தரப்பும் ஒன்றுபட்டு, மேலும் நெருக்கமான சீன-ஆசியான் பொது எதிர்கால சமூகத்தைக் கூட்டாக கட்டியமைத்து, தென் சீன கடலில் நடத்தை விதிமுறையை வெகுவிரைவில் எட்ட வேண்டும் என்று சீனத் தரப்பு எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
