சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், 16ஆம் நாள், ஜிநான் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட 120ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இப்பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு கடிதம் அனுப்பி, வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் இதில் கூறுகையில், புதிய துவக்கப் புள்ளியில், இப்பல்கலைக்கழகம் நாட்டுப்பற்றுடன் செயல்பட்டு, அதன் தனிச்சிறப்பியல்களை பராமரித்து, ஹாங்காங், மகௌ மற்றும் தைவானின் இளம் திறமைசாலிகளை வளர்த்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டின் நட்பார்ந்த பரிமாற்றத்தை விரைவுபடுத்தி, கல்வித் தரத்தைத் தொடர்ந்து உயர்த்தி, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்தை முன்னேற்றுதற்கு புதிய பங்காற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
