ஆசிய-பசிபிக் சமூக எதிர்காலத்தை கூட்டாக உருவாக்க வேண்டும்

சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகம் மற்றும் புதிய சகாப்தத்திற்கான சர்வதேசத் தொடர்பியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து சிஜிடிஎன் உலகளாவிய கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.

இந்தக் கருத்துக்கணிப்பில் ஏபெக் அமைப்பின் 15 உறுப்பு பொருளாதாரங்களைச் சேர்ந்த மொத்தம் 4,495 பேர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்களில் 67.1 சதவீதம் பேர், திறந்த உலகப் பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உலகமயமாக்கல் ஆகியவற்றை ஆதரிப்பதில் ஏபெக் அமைப்பு நேர்மறையான பங்களிப்பைச் செய்து வருவதாகக் கருத்து தெரிவித்தனர்.

மேலும், ஆசிய – பசிபிக் பொருளாதாரங்கள் அனைத்தும் திறந்தநிலை, உள்ளடக்கிய வளர்ச்சி, புத்தாக்கம், இணைப்புத்தன்மை மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றுக்காகச் செயல்பட வேண்டும் என்று 71.1 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆசிய – பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா அளித்து வரும் பங்களிப்பு நேர்மறையாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 64.3 சதவீதம் பேர், பிராந்தியப் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய உந்துசக்தியாகச் சீனா விளங்குவதாக அடையாளம் கண்டுள்ளனர். அதேபோல், 61.7 சதவீதத்திற்கும் அதிகமானோர், பகிரப்படும் எதிர்காலத்தைக் கொண்ட ஆசிய – பசிபிக் சமூகத்தை உருவாக்குவதற்குச் சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு நேர்மறையான மதிப்பீட்டை வழங்கியுள்ளனர்.

இந்த முயற்சிகள், பிராந்திய ஒத்துழைப்பில் சீனா கொண்டுள்ள உறுதிப்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும் அவர்கள் அங்கீகரித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author