உள்ளூர் நேரப்படி மே 8ஆம் நாள் முற்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெல்கிரேட் நகரில் செர்பிய அரசுத் தலைவர் அலெக்ஸாண்டர் வூசிச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீன-செர்பிய பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை ஆழமாக்கி, புதிய யுகத்தில் சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூதாயத்தை உருவாக்க இரு நாட்டு அரசுத் தலைவர்கள் அறிவித்தனர்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, அரசுத் தலைவர் வூசிச்சியுடன் இரு நாட்டுறவு பாய்ச்சல் வளர்ச்சியடைந்து, வரலாற்று தன்மையுடைய சாதனைகளைப் பெறுவதற்கு வழிக்காட்டி வருகின்றேன்.
செர்பியாவுடன் மனம் ஒருமித்து, இரு நாட்டுறவை வளர்த்து, இரு நாடுகளின் அடிப்படை மற்றும் தொலைநோக்கு நலன்களைக் கூட்டாகப் பேணிக்காத்து, புதிய யுகத்தில் சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்று வலியுறுத்தினார்.
மேலும், இரு தரப்பும், புதிய யுகத்தில் சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தின் மூலம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தரக் கட்டுமானத்தையும், சீன-மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்புகளையும் விரிவுபடுத்தி, இரு நாடுகளின் நவீனமயமாக்கப் போக்கிற்குத் துணைப் புரிய வேண்டும்.
முதலாவதாக, இரு நாட்டுறவின் நெடுநோக்கு தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து, இரு தரப்புறவின் ஒட்டுமொத்த வளர்ச்சி திசையைக் கடைப்பிடிக்க வேண்டும். இரண்டாவதாக, இரு நாட்டு ஒத்துழைப்புகளின் பயன்தரும் தன்மையில் ஊன்றி நின்று, இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய வேண்டும்.
மூன்றாவதாக, இரு நாட்டுறவின் புத்தாக்கத் தன்மையை வெளிக்கொணர்த்து, புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
வூசிச்சி கூறுகையில், சீனாவின் முதலீடு மற்றும் சீனாவுடனான ஒத்துழைப்பு, செர்பியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியைப் பெரிதும் முன்னேற்றியுள்ளன.
சீனாவுடன் பல்வேறு துறைகளிலான மற்றும் நிலைகளிலான பரிமாற்றங்களை நெருக்கமாக்கி, அடிப்படை வசதி கட்டுமானம், புதிய ஆற்றல், புத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு, பண்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த செர்பியா விரும்புகிறது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த உலக வளர்ச்சி முன்மொழிவு, உலகப் பாதுகாப்பு முன்மொழிவு, உலக நாகரிக முன்மொழிவு ஆகியவற்றுக்குச் செர்பியா உறுதியுடன் ஆதரவளித்து, இவற்றில் ஆக்கமுடன் பங்கெடுக்கும் என்று தெரிவித்தார்.
இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சீன-செர்பிய பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை ஆழமாக்கி, புதிய யுகத்தில் சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவது பற்றிய கூட்டறிக்கையில் இருவரும் கூட்டாக கையொப்பமிட்டனர்.