33ஆவது ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டம் நவம்பர் 18, 19 ஆகிய நாட்களில் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற உள்ளது. இதில் சர்வதேச சமூகம் அதிக கவனம் செலுத்துகிறது. பல கோணங்களிலிருந்து பார்த்தால், ஏபெக் அமைப்பின் ஷென்சென் நேரம் என அழைக்கப்படும் இந்நிகழ்வு ஏன் கவனத்தை ஈர்ப்பது பற்றி நன்கு புரிந்து கொள்ளலாம்.
சர்வதேச நிலைமையைப் பார்த்தால், புவிசார் அரசியல் மோதல் தீவிரமாகி வருவதுடன், ஒருதரப்புவாதமும் பாதுகாப்புவாதமும் தலைதூக்கி, சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்கு கடுமையான சவால்களை எதிர்நோக்கி வருகிறது. இதனிடையே புதிய சுற்று தொழில்நுட்பப் புரட்சி மற்றும் தொழில்துறை மாற்றம் ஆழமாக வளர்ந்து வரும் நிலையில், வளர்ச்சிக்கான புதிய இயக்காற்றல் குவிந்து வருகிறது. ஆசிய-பசிபிக் பிரதேசத்தைப் பார்த்தால், ஆசிய-பசிபிக் தாராள வர்த்தக மண்டலம் பற்றி ஏபெக் தலைவர்கள் முன்வைத்த நெடுநோக்கு பார்வையின் 20ஆவது ஆண்டு நிறைவு வரவேற்கப்படும் நடப்பாண்டில், திறப்பு மற்றும் ஒத்துழைப்பு என்பது பல்வேறு உறுப்பினர்களின் பொது விருப்பமாகியுள்ளது. மேலும், சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டான இவ்வாண்டு, ஏபெக் அமைப்பில் சீனா இணைந்த 35ஆவது ஆண்டு நிறைவும் ஆகும். இந்த புதிய ஐந்தாண்டு திட்டத்தில், உயர்தர வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்கி ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றிக்கான புதிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல தருணங்களின் சந்திப்பில், 3ஆவது முறை ஏபெக் அமைப்பின் தலைமை பதவியை வகிக்கும் சீனா ஆசிய-பசிபிக் பிரதேச ஒத்துழைப்புக்கு பெரும் உந்துசக்தியை ஊட்டுவதோடு, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கும் சர்வதேச ஒத்துழைப்புக்கும் மேலதிக உறுதித்தன்மை, நிலைத்தன்மை மற்றும் நேர்மறை ஆற்றலை வழங்க வேண்டும் என்று முழு உலகமும் எதிர்பார்க்கிறது.
