ஷென்செனில் சீன-ரஷிய-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பு பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் நவம்பர் 16ஆம் நாள் கூறுகையில், சீனா, ரஷியா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் அரசுத் தலைவர்களும் நேர்முகச் சந்திப்பை நடத்துவது இதுவே முதல்முறையாகும். உலக அமைதியைப் பேணிக்காப்பது, நெடுநோக்கு நிதானமான வல்லரசுறவை முன்னேற்றுவது முதலியவை பற்றி அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வர். இந்த மூன்று நாடுகள், ஐ.நாவின் நிறுவன உறுப்பு நாடுகளும், பாதுகாப்பவையின் நிரந்தர அங்க நாடுகளும் ஆகும். தற்போதைய நிலையில், இம்மூன்று நாடுகள் ஒத்துழைத்து, உலகளாவிய அறைகூவல்களைச் சமாளித்து, உலக அமைதி மற்றும் நிதானத்தை முன்னேற்றும் முக்கியப் பொறுப்பு ஏற்கின்றன என்று தெரிவித்தார்.
சீன-ரஷிய-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பு முன்னோடி முக்கியத்துவம் வாய்ந்தது: சீனா
You May Also Like
சீனாவின் வறுமை ஒழிப்பு பற்றிய கருத்து கணிப்பு
February 24, 2026
கிர்கிஸ்தானில் சீனத்திரைப்படக் கண்காட்சி
August 13, 2026
