சீன ஊடக குழுமத்தின் ஏபெக் தூதர் மற்றும் சிஈஒ வட்டமேசை மாநாடு 15ஆம் நாள் ஷென்சென் மாநகரில் நடைபெற்றது. திறப்பு வாய்ப்புகளை பகிர்ந்து கொண்டு, பரஸ்பர நன்மை தரும் கூட்டு வெற்றியை நனவாக்குவது என்ற தலைப்பில் நடைபெற்ற இம்மாநாடு, ஏபெக் உறுப்பு பொருளாதாரங்களுக்கும் சீன நிறுவனங்களுக்கும் இடையே பரிமாற்றத்திற்கான தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துறையின் துணை அமைச்சரும், சீன ஊடக குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியோங் இதில் பங்கேற்று நிகழ்த்திய உரையில், ஆசிய-பசிபிக் பிரதேசம் நமது தாயகமும், உலகப் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல் ஊற்றுமூலமும் ஆகும் என்றும் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் தெரிவித்ததாக குறிப்பிட்டார். இம்மாநாடு, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் கூட்டாளிகளுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையையும், நட்பார்ந்த ஒத்துழைப்பையும் ஊக்குவித்து, இப்பிரதேச மக்களுக்கு உண்மையான நன்மைகளை வழங்கும். ஆசிய-பசிபிக் பொது எதிர்கால சமூகத்தை கட்டியமைத்து கூட்டு செழுமையை மேம்படுத்துவதற்கு மேலும் பங்களிக்கும் வகையில், அனைத்துத் துறைகளையும் சேர்ந்த நண்பர்களுடன் ஒன்றுக்கொன்று கற்றுகொண்டு கூட்டாக பணியாற்ற சீன ஊடக குழுமம் விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
