பாரம்பரிய பரவல் பாதுகாப்பு பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்துக்கள் மற்றும் ஷிச்சின்பிங்கின் பதில் கடிதம் எனும் சிறப்பு நிகழ்ச்சி ஒளிப்பரப்பு

ஏபெகின் 33ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாடு விரைவில் தொடங்கவுள்ளது. சீன ஊடக குழுமம் தயாரித்த பாரம்பரிய பரவல் பாதுகாப்பு பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்துக்கள் மற்றும் ஷிச்சின்பிங்கின் பதில் கடிதம் எனும் சிறப்பு நிகழ்ச்சிகள் நவம்பர் 15ஆம் நாள் முதல், ஏபெக் உறுப்பினர்களின் முக்கிய செய்தி ஊடகங்களில்  ஒளிப்பரப்பப்படும்.

சீனாவின் தலைசிறந்த பாரம்பரிய கலாச்சார பரவல் வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்தி, தொடர்புடைய பணியை ஷிச்சின்பிங் வடிவமைத்து விரைவுபடுத்துவது பற்றிய கதைகள் பாரம்பரிய பரவல் பாதுகாப்பு பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்துக்கள் எனும் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன. கலாச்சாரம் மீதான ஷிச்சின்பிங்கின் ஆழ்ந்த புரிந்துணர்வு, சீனாவின் கலாச்சார பரவல் மற்றும் நம்பிக்கை குறித்த ஆழமான சிந்தனைகள் முதலியவை இதன் மூலம் வெளிகாட்டப்பட்டுள்ளன. மேலும், பல சர்வதேச நண்பர்கள், கலைஞர்கள், இளைஞர்கள் முதலியோருக்கு ஷிச்சின்பிங் வழங்கிய பதில் கடிதங்கள், ஷிச்சின்பிங்கின் பதில் கடிதம் எனும் சிறப்பு நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளன. இத்தகைய பதில் கடிதங்களைப் படித்து, தொடர்புடைய அன்பான கதைகளை அறிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைய்சியோங், இவ்விரு சிறப்பு நிகழ்ச்சிக்கான துவக்க விழாவில் கூறுகையில், இவ்விரு சிறப்பு நிகழ்ச்சிகளின் மூலம், ஷிச்சின்பிங் அவர்களது ஆட்சிமுறைக்கான அறிவுத்திறமையை பிராந்திய மக்கள் மேலும் ஆழமாகப் புரிந்துகொண்டு, புதிய யுகத்தில் சீனாவின் பல்வேறு மாற்றங்களை அறிந்துகொண்டு, சீன கலாச்சாரத்தின் அனைத்தையும் உள்ளடக்கும் தன்மையை நன்றாகப் புரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author