உலகளவில் 10வது இடத்தை வகித்துள்ள சீனாவின் புத்தாக்க குறியீடு

உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு வெளியிட்ட 2026ஆம் ஆண்டு உலகப் புத்தாக்க குறியீட்டு அறிக்கையின்படி, சீனாவின் புத்தாக்க குறியீடு 2025ஆம் ஆண்டில் இருந்ததைப் போல், உலகளவில் 10வது இடத்தை வகித்துள்ளது. ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன், அமெரிக்கா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.

உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு, 80 இலக்குகளின் மூலம் சுமார் 140 பொருளாதார நாடுகளின் புத்தாக்க நிலைமையை மதிப்பிட்டு, இவ்வறிக்கையை வெளியிட்டது. இவ்வாண்டின் அறிக்கையில், 3466 ஆழ்ந்த அறிவியல் கொண்ட புதிய நிறுவனங்கள் சீனாவில் உள்ளன. இந்த எண்ணிக்கை அமெரிக்காவை அடுத்து, உலகளவில் 2வது இடத்தை வகித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author