அமெரிக்காவிற்கு ‘நோ’ சொன்ன பிரிட்டன்! ஈரான் மீதான தாக்குதலுக்குத் தளங்களை வழங்க மறுப்பு  

Estimated read time 1 min read

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், ஈரான் மீதான தாக்குதலுக்கு தனது நாட்டு வான்வழி தளங்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு அதிரடியாக நிராகரித்துள்ளது.
ஈரான் மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும் என்று பிரிட்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஸ்விண்டன் நகருக்கு அருகிலுள்ள ‘RAF Fairford’ தளத்திலிருந்து அமெரிக்காவின் நீண்டதூர குண்டுவீச்சு விமானங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நட்பு நாடு சட்டவிரோதமான ராணுவ நடவடிக்கையில் ஈடுபடும்போது, அதற்கு தளங்களை வழங்கித் துணையாக இருப்பது பிரிட்டன் கொள்கைக்கு எதிரானது என லண்டன் விளக்கம் அளித்துள்ளது.

You May Also Like

More From Author