ஏபெக்கின் 33ஆவது தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் ஷிச்சின்பிங் பங்கேற்பு

Estimated read time 1 min read

ஏபெக் என்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 33ஆவது தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் நவம்பர் 18, 19ஆகிய நாட்களில் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ளது. ஆசிய-பசிபிக் பொதுச் சமூகத்தைக் கட்டியமைத்து கூட்டுச் செழுமையை முன்னேற்றுவது என்பது இக்கூட்டத்தின் கருப்பொருளாகும். இக்கூட்டத்துக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தலைமை தாங்கி உரை நிகழ்த்தவுள்ளதாகச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.

மேலும், ஏபெக் தொழில் மற்றும் வணிகத் துறை தலைவர்களின் உச்சிமாநாடு 17,18 ஆகிய நாட்களில் ஷென்செனில் நடத்தப்படும். கூட்டுச் செழுமையை முன்னேற்றி பகிரப்பட்ட எதிர்காலத்தில் வெற்றி பெறுவது என்பதைக் கருப்பொருளாகக் கொண்ட இவ்வுச்சிமாநாட்டின் துவக்க விழாவிலும் ஷிச்சின்பிங் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளார். 

இக்கூட்டத்தில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிதிநிதிகளுக்கு ஷிச்சின்பிங் வரவேற்பு விருந்து ஒன்றை அளிப்பதோடு, வெளிநாட்டுத் தலைவர்களுடனான இரு தரப்புப் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

 

Please follow and like us:

You May Also Like

More From Author