2025ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க, தியான்ஜின் மாநகரை வந்தடைந்த இந்தியத் தலைமையமைச்சர் நரேத்திர மோடியுடன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 31ஆம் நாள் சந்திப்பு நடத்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், கடந்த ஆண்டு கசானில் ஒரு வெற்றிகரமான சந்திப்பை நடத்தினோம், மேலும் சீனா-இந்தியா உறவுகள் மீண்டும் தொடங்கி, இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றங்களும் ஒத்துழைப்புகளும் தொடர்ந்து புதிய முன்னேற்றத்தை அடைந்தன என்று தெரிவித்தார்.
இவ்வாண்டு சீன-இந்திய தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவு ஆகும். இரு தரப்பும் உத்திநோக்கு பார்வை மற்றும் நீண்ட காலக் கண்ணோட்டத்திலிருந்து இரு நாட்டு உறவுகளைப் பார்த்து கையாள வேண்டும். தியன் ஜின் உச்சி மாநாட்டுக்குப் பிறகு, இரு நாட்டு உறவுகள் மேலும் மேம்பாட்டு, தொடர்ந்து சீரான மற்றும் நிலையான வளர்ச்சியடைவதை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
மோடி கூறுகையில், கசானில் அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் நடத்திய சந்திப்பு, இந்திய-சீன உறவுகளின் வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது. இரு நாட்டு உறவுகள் மீண்டும் ஆக்கப்பூர்வமான பாதைக்குத் திரும்பியுள்ளது. இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகளாக திகழ்கின்றன. இரு நாடுகளுக்கிடையில் கருத்து வேறுபாடுகளை விட ஒத்த கருத்துக்கள் மிக அதிகம்.
இந்தியா இருதரப்பு உறவுகளை நீண்டகால கண்ணோட்டத்தில் பார்க்கவும் வளர்க்கவும் விரும்புகின்றது. உலகப் பொருளாதாரத்தில் அதிக நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளதால், முக்கிய உலகப் பொருளாதாரங்களாக இந்தியாவும் சீனாவும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மிகவும் முக்கியம். எல்லைப் பிரச்சினைக்கு நியாயமான மற்றும் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் காண சீனாவுடன் இணைந்து பரிமாற்ற இந்தியா தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.