சட்டத்தின்படி ஆட்சி முறையை முழுமைப்படுத்துவதற்கான ஷிச்சின்பிங்கின் வலியுறுத்தல்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில், சட்டத்தின்படி ஆட்சி முறையை முழுமைப்படுத்த கட்டளையிட்டார். அவர் கூறுகையில்,

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு முதல் இது வரை, சட்டத்தின்படி ஆட்சி முறையை முழுமைப்படுத்தும் பொது நிலைமை அடிப்படையாக உருவாக்கியுள்ளது. தனிச்சிறப்பு வாய்ந்த சீன சோஷலிச சட்டத்தின்படி ஆட்சி முறைமை தொடர்ந்து மேம்பட்டு, சீன தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச சட்டத்தின்படி ஆட்சி முறையின் வளர்ச்சி மேலும் முன்னேறியுள்ளது என்றார்.

புதிய பாதையில், புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச சட்டத்தின் ஆட்சி சிந்தனையை பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டத்தின் சீர்திருத்தம், வளர்ச்சி, நிதானம் முதலியவை ஒருங்கிணைப்பாக வளர்ந்து வருவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சமூகத்தின் நியாயம் மற்றும் நீதியில் கவனம் செலுத்த வேண்டும். சீன பாணி நவீனமயமாக்கம் அடிப்படையில், வல்லரசு கட்டுமானத்தையும் சீன நாட்டின் மறுமலர்ச்சியையும் விரைவுபடுத்துவதற்கு இது சட்ட உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியைச் சேர்ந்த சட்ட ஆட்சி முறை கூட்டம் நவம்பர் 17, 18ஆம் ஆகிய இரு நாட்களாக, பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author