தமிழ் சினிமாவில் ‘தெகிடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிரதீப் கே விஜயன்.
இவர் பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த சம்பவம், கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதீப், கடந்த 2013 ஆம் ஆண்டு, நடிகர் ‘மிர்ச்சி’ சிவா நடிப்பில் வெளியான ‘சொன்னா புரியாது’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.
அதன் பின்னர் பல படங்களில், காமெடி கலந்த குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தார். குறிப்பாக தெகிடி திரைப்படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஒரு நாள் கூத்து, திருட்டு பயலே 2, இரும்புத்திரை, கென்னடி கிளப் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.