சீனாவில் முதல்முறை நடைபெற்ற உலக தூய்மை தின நிகழ்வு

Estimated read time 0 min read

2026 உலக தூய்மை தினத்தின் உலகளாவிய பிரதான நிகழ்வு 20ஆம் நாள், சீனாவின் ட்சேஜியாங் மாநிலத்தின் ஷாவ்சிங் நகரில் துவங்கியது.

இதில், ஐ.நாவின் நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் சீனத் தேசிய அமைச்சகங்களின் பிரதிநிதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் நிபுணர்கள் உள்ளிட்ட சுமார் 800 விருந்தினர்கள் பங்கெடுத்தனர். அதேவேளையில், தூய்மையான நகரக் கட்டுமானச் சாதனைக் கண்காட்சி, சுற்றுச் சூழல் சுகாதார கண்காட்சி முதலியவை நடைபெறுகின்றன.

இத்தினம், ஐ.நா பொது பேரவையால் நிர்ணயிக்கப்பட்ட உலகளாவிய நினைவு தினமாகும். இதன் பிரதான நிகழ்வு சீனாவில் நடைபெற்றது இதுவே முதல்முறை. சீனாவின் பசுமையான வளர்ச்சி மற்றும் நாகரிக முன்னேற்றங்கள் பற்றிய சர்வதேச சமூகத்தின் அங்கீகாரம் மற்றும் பாராட்டுக்களை இது வெளிப்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author