அமெரிக்காவில் 2026 இடைக்காலத் தேர்தல் 3-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இது பற்றி செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் கூறுகையில்,
இடைக்காலத் தேர்தல் அமெரிக்காவின் உள் விவகாரமாகும் என்று தெரிவித்தார். சீனா அமெரிக்காவுடன் சேர்ந்து இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்தக்களைச் சீராக நடைமுறைப்படுத்தி, பரிமாற்றத்தை அதிகரித்து, கருத்துவேற்றுமைகளைச் சரியான முறையில் தீர்க்க விரும்புவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையில் மதிப்பு, நேர்மை, சமநிலை ஆகியவற்றின் அடிப்படையிலான ஆக்கப்பூர்வ நெடுநோக்கு நிதானம் வாய்ந்த உறவைக் கட்டியமைக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
