கடந்த 10 ஆண்டுகளில், 25 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள கிராமச் சாலைகளை சீனா புதிதாகக் கட்டியமைத்துள்ளது. 2023ஆம் ஆண்டு வரை, சீனாவில் கிராமச்சாலைகளின் மொத்த நீளம் 46 லட்சம் கிலோமீட்டரை எட்டியது என்று சீன அரசு தெரிவித்துள்ளது.
புதிய யுகத்தில் சீனக் கிராமச்சாலை மேம்பாடு என்ற தலைப்பிலான வெள்ளையறிக்கையை சீன அரசவைச் செய்தி அலுவலகம் 29ஆம் நாள் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. சீனாவின் கிராமப்புறங்களில் சாலைகளின் கட்டுமானம், மேலாண்மை, பராமரிப்பு மற்றும் இயக்கம் ஆகிய நடைமுறைகள் மற்றும் சாதானைகள் இந்த வெள்ளையறிக்கையில் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளது.
மிக அதிக பரப்பளவு கொண்டு, மிக அதிக மக்களுக்கு சேவை வழங்கி, பொது நலன் தரும் போக்குவரத்து வசதியாக, கிராமச்சாலை விளங்குகிறது. கிராமசாசிகளின் பயணம், மக்களின் வாழ்வாதார உயர்வு, குடியிருப்புச் சுற்றுச்சூழல் மேம்பாடு, வேளாண்மை மற்றும் கிராமங்களின் நவீனயமாக்கம் ஆகியவற்றுக்கு கிராமச்சாலை முக்கிய பங்காற்றும் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுவது என்ற கருத்தைப் பின்பற்றி வரும் சீனா, பல்வேறு நாடுகளுடன் இணைந்து கிராமச்சாலை துறையைச் சார்ந்த பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும். கிராமச்சாலை மேம்பாட்டிற்கான புதிய வழிமுறையை கூட்டாக தேடி கண்டுபிடிக்கவும், உலகளாவிய கிராமச்சாலை மற்றும் வறுமை ஒழிப்புப் பணிகளுக்கு சீனா பங்காற்றும் என்றும் இந்த வெள்ளையறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.