புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர்.
பாஜக மேலிட உத்தரவை அடுத்து புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவண குமார், தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் மோடியின் உத்தரவால் ராஜினாமா செய்கிறேன் என சாய் சரவண குமார் பேட்டியளித்துள்ளார்.
இதேபோல் 3 நியமன எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக புதுச்சேரி சபாநாயர் செல்வம் அறிவித்துள்ளார். பாஜக மேலிட உத்தரவை அடுத்து ராமலிங்கம், அசோக் பாபு, வெங்கடேசன் ஆகிய மூவரும் தங்களது நியமன எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுஒருபுறம் இருக்க புதுச்சேரி மாநில பாஜக தலைவர் பதவிக்கு அமைச்சர் நமச்சிவாயம், ராமலிங்கம், அசோக் பாபு ஆகிய மூவரின் பட்டியல் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவரை கட்சி மேலிடம் தேர்வு செய்து, அவர் வரும் 30ம் தேதி பதவியேற்பார் என மேலிட பொறுப்பாளர் சுரானா தெரிவித்துள்ளார்.