அமெரிக்கா – ஈரான் போர்: $37.5 பில்லியனைத் தாண்டிய இராணுவச் செலவு; கூடுதல் நிதி கோரும் பென்டகன்  

Estimated read time 0 min read

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்காக இதுவரை $37.5 பில்லியன்(சுமார் ₹3.1 லட்சம் கோடிக்கும் அதிகம்) செலவிடப்பட்டுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அந்நாட்டு நாடாளுமன்ற எம்பிக்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட $29 பில்லியன் என்ற தோராயமான மதிப்பீட்டை விட இது கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போரை மீண்டும் தீவிரப்படுத்திய பிறகு, செனட் ஒதுக்கீட்டுக் குழுவின் முன்பாக பீட் ஹெக்செத் ஆஜராகி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தற்போது கூறப்பட்டுள்ள தொகையில், வரும் செப்டம்பர் 30 வரை ராணுவ வீரர்களின் ஊதியம் மற்றும் இதர செலவுகளும் அடங்கும்.
போரைத் தொடர்ந்து நடத்துவதற்காக மேலும் $67 பில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஹெக்செத் கோரிக்கை விடுத்துள்ளார்.

You May Also Like

More From Author