தமிழக சட்டப்பேரவை தேர்தல் – விஜபி தொகுதி பட்டியல்!

Estimated read time 1 min read

சட்டப்பேரவை தேர்தலில் களம் காணும் விஐபி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுபவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை தற்போது காணலாம்.

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் காசி என்பவர் போட்டியிடுகிறார்.

கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூவை எதிர்த்து கருணாநிதி போட்டியிடுகிறார். அருப்புக்கோட்டை தொகுதியில் KKSSR ராமச்சந்திரனை எதிர்த்து சேதுபதி போட்டியிடுகிறார்.

போடியநாயக்கனூரில் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து V.T.நாராயணசாமியும், திருமங்கலத்தில் R.B.உதயகுமாரை எதிர்த்து சேடப்பட்டி மு.மணிமாறனும் போட்டியிடுகின்றனர்.

மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து, A.C.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி சார்பாக இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடுகிறார்.

மதுரை கிழக்கு தொகுதியில் பி.மூர்த்தியை எதிர்த்து கே.மகேந்திரனும், மதுரை மேற்கில் செல்லூர் ராஜூவை எதிர்த்து ரகு பாலாஜியும் போட்டியிடுகின்றனர்.

விராலிமலையில் சி.விஜயபாஸ்கரை எதிர்த்து, கே.கே.செல்லபாண்டியனும், ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கத்தை எதிர்த்து M.சேகரும் போட்டியிடுகின்றனர்.

மன்னார்குடியில் டி.ஆர்.பி.ராஜாவை எதிர்த்து, அமமுக வேட்பாளர் காமராஜும், வேதாரண்யத்தில் O.S.மணியனை எதிர்த்து புகழேந்தியும், குறிஞ்சிப்பாடியில் M.R.K.பன்னீர் செல்வத்தை எதிர்த்து புவனேந்திரனும் போட்டியிடுகின்றனர்.

குன்னம் தொகுதியில் சிவசங்கரை எதிர்த்து இந்திய ஜனநாயக கட்சி சார்பாக சரண்யாவும், திருவெறும்பூரில் அன்பில் மகேஸை எதிர்த்து குமாரும் போட்டியிடுகின்றனர்.

திருச்சி மேற்கு தொகுதியில் K.N.நேருவை எதிர்த்து அமமுக வேட்பாளர் ராஜசேகரனும், திண்டுக்கல்லில் திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து ஐ.பி.செந்தில்குமாரும் போட்டியிடுகின்றனர்.

கரூர் தொகுதியில் M.R.விஜயபாஸ்கரை எதிர்த்து தியாகராஜனும், ஒட்டன் சத்திரம் தொகுதியில் சக்கரபாணியை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விடியல் சேகரும் போட்டியிடுகின்றனர்.

உடுமலைப்பேட்டையில் உடுமலை ராதாகிருஷ்ணனை எதிர்த்து ஜெயக்குமாரும், கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை எதிர்த்து அம்மன் கே.அர்ஜூனனும் போட்டியிடுகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author