தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த அதிக கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு தற்போது வரையிலும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி முதல் திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
அதாவது, தென் மாவட்டங்களில் பெய்த அதிக அளவு கனமழையால் திருநெல்வேலியில் திருச்செந்தூர் இடையே ரயில் தண்டவாளங்களில் அதிக அளவு சேதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி டிசம்பர் 31ம் தேதி வரையிலும் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இந்த முன்பதிவில்லா ரயில்கள் திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.