அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் கொசு பரவலால் “கிழக்கு குதிரை மூளை அழற்சி” என்னும் அரிதான நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிளைமவுத் மாவட்டத்தில் ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், டக்ளஸ், ஆக்ஸ்போர்டு, சுட்டன், வெப்ஸ்டர் உள்ளிட்ட இடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கொசுக்கள் அதிகமாக இருக்கின்ற காலத்தில் வெளியே செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று இம்மாநிலத்தின் சுகாதார துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கு முன், இம்மாநிலத்தைச் சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.