அம்மா ! கவிஞர் இரா.இரவி!
மனிதர்கள் மட்டுமல்ல பறவைகள் விலங்குகள் உயிரினங்கள் அனைத்திலும் ஒப்பற்ற உயர்ந்த உறவு அம்மா!
சொற்களால் சொல்லிவிட முடியாத சொக்கத் தங்கம் அம்மா!
மகன் குற்றவாளியாக இருந்தாலும் மன்னிக்கும் பேருள்ளம் அம்மா! மனுநீதிச் சோழனின் எதிர்பதம் அம்மா!
அம்மா தாசனாக இருப்பது அவமானம் இல்லை! மனைவி தாசனாக இருந்தால் மற்றவர் மதிப்பதில்லை!
அச்சமின்றி உரக்கச் சொல்லுங்கள்! திருமணத்திற்குப் பின்னும் நான் அம்மா பிள்ளை என்று!
அம்மா தமிழ் போல் உயர்ந்தவள்! இரண்டு சொற்களிலும் இருப்பவை உயிர் மெய் உயிர்மெய் எழுத்துக்கள்!
அம்மா புராணம் பாடுவது தவறில்லை!அம்மா உண்மை புராணம் கற்பனை!