சீனாவின் பாரம்பரிய விழாவான வசந்த விழாவை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சர்வதேச காணொலி செய்தி நிறுவனம், முதன்முறையாக, ஆசிய-பசிபிக் வானொலிப் கூட்டணி, அரேபிய நாடுகளின் வானொலிப் கூட்டணி, ஆபிரிக்க வானொலிப் கூட்டணி, ஐரோப்பிய செய்தி பரிமாற்ற கூட்டணி, லத்தின் அமெரிக்க செய்திப் கூட்டணி ஆகியவற்றுடன் இணைந்து, உலக நேயர்களுக்காக வசந்த விழாவுக்கான கொண்டாட்ட நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது.
169 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலுள்ள 5 கூட்டணிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட செய்தி ஊடகங்களுக்கு தொடர்புடைய அம்சங்கள் வழங்கப்படும். இந்த ஊடக கூட்டணிகளின் பொறுப்பாளர்கள், காணொலி வழியாக, வசந்த விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.