10 நாடுகள், 15 ராஜினாமாக்கள்! உலகையே அதிரவைக்கும் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’  

Estimated read time 1 min read

அமெரிக்க நிதி ஆலோசகர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்புடைய 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.
இதில் 1,000-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டது தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் தொடர்புடைய 15 உயர்மட்ட அதிகாரிகள் இதுவரை 10 நாடுகளில் ராஜினாமா செய்துள்ளனர்; மேலும் 80 முக்கிய நபர்கள் மீது விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
குறிப்பாக பிரிட்டனில் முன்னாள் தூதர் பீட்டர் மாண்டெல்சன் மற்றும் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமை அதிகாரி மோர்கன் மெக்ஸ்வீனி ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
ஸ்லோவாக்கியா, ஸ்வீடன் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் தூதர்களும், அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

You May Also Like

More From Author