அமெரிக்க-சீனா பதட்டங்கள் மற்றும் தரவு இறையாண்மை குறித்த வளர்ந்து வரும் கவலைகளை பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையாக, உலகளாவிய சொத்து மேலாண்மை நிறுவனமான பிளாக்ராக் (BlackRock) சீனாவிற்கு பயணிக்கும் ஊழியர்களுக்கு கடுமையான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூலை 16 முதல், சீனாவிற்கு வணிக மற்றும் தனிப்பட்ட பயணம் செய்யும் ஊழியர்கள், பயணத்தின்போது நிறுவனம் வழங்கிய சாதனங்கள் மற்றும் நெட்வொர்க் அணுகலைப் பயன்படுத்துவதை தடை செய்துள்ளது.
அதிகரித்த ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மை மற்றும் செயல்பாட்டு ஆபத்து காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ப்ளூம்பெர்க் மற்றும் ராய்ட்டர்ஸ் மதிப்பாய்வு செய்த உள் குறிப்புகளின்படி, பிளாக்ராக் ஊழியர்கள் இனி சீனாவில் இருக்கும்போது நிறுவன ஐபோன்கள், மடிக்கணினிகளைப் பயன்படுத்தவோ அல்லது விபிஎன்கள் வழியாக நிறுவனத்தின் அமைப்புகளை அணுகவோ முடியாது.
சீனாவுக்கு செல்லும்போது நிறுவனத்தின் மொபைல் போன்களை கொண்டு செல்ல தடை விதித்தது பிளாக்ராக்
