நம்பிக்கையுடன் பாகம் 2

Estimated read time 1 min read

Web team

r2.jpg

நம்பிக்கையுடன் பாகம் 2
நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
கற்பகம் புத்தகாலயம் 4/2 சுந்தரம் தெரு .தியாகராயர் நகர் .சென்னை 600017.
தொலைபேசி 044-24314347
விலை 70 ரூபாய்
நம்பிக்கையுடன் பாகம் 1 வெற்றிக்கு வழி சொன்னது .நம்பிக்கையுடன் பாகம் 2
தோல்வியடைந்தவனுக்கு ஆறுதல் சொல்கின்றது .சித்தர்கள் போல ,ஜென் குருக்கள் போல வாழ்வியல் இயல்புகளை விளக்கி உள்ளார் .தோல்விக்குத் துவளாத உள்ளம் தரும் விதமாக கவிதைகள் உள்ளன .
கற்பகம் புத்தகாலயத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது .அட்டைப்படம் அச்சு ,வடிவமைப்பு யாவும் நன்று .ஒரே கல்லில் மூன்று மாங்காய் போல வித்தகக் கவிஞர் பா .விஜய் கவிதைகள் ,அறிஞர்களின் பொன் மொழிகள் ,பொது அறிவு விடைகள் உள்ளன .

.இந்த நூலைப் படிக்கும் போது மேற்கோள் காட்ட வேண்டிய பக்கங்களை மடித்து வைத்து வந்தால் எல்லா பக்கங்களும் மடிக்கும் படி ஆகி விட்டது .நூல் விமர்சனத்தில் அனைத்து கவிதைகளையும் மேற்கோள் காட்ட முடியாது என்பதால் மறு பரிசீலனை செய்து சில கவிதைகளைத் தவிர்த்து விட்டேன் .
உறக்கம் ஒரு போதை மாத்திரை
உறங்கும் போதை
இருக்கும் வரைக்கும்
உழைப்பு அழுந்திக் கிடக்கும்
பாட்டுகோட்டை பட்டுகோட்டை கல்யாண சுந்தரத்தின் வைர வரிகளான துங்காதே தம்பி துங்காதே நினைவூட்டும் விதமாக இருந்தது .உழைப்பின் உயர்வை உணர்த்தியது .
அவநம்பிக்கை எதிலும் வேண்டும் என்று உணர்த்தும் வரிகள் நன்று .
தியானம் செய் !
அவநம்பிக்கையை எரிக்கும்
மயானம் செய் !
இழப்புகளுக்காக வருந்தி நேரம் கழிக்காதே .புத்திப் புகட்டுகின்றார்
ஜெயிக்கத் துடிப்பவன்
இழப்புகளையும் ஒருவித
ஜெயிப்பாகவே ஏற்பான் !
மனதில் வெற்றிக்கான நெருப்பு எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்கிறார் .
வெற்றி வரும் வரை
விழிகள் உறங்க நேர்ந்தாலும்
உள்ளே விழித்திரு !
இந்நூலில் உள்ள கவிதைகள் யாவும் இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்கள்
நூலுக்காக கவிதை எழுத வேண்டும் என்று எழுதி இருந்தால் இவ்வளவு சிறப்பாக வந்து இருக்காது .அவர் வாழ்வில் கண்டதை , சந்தித்தை , உணர்ந்து , நொந்து ஞானி போல உண்மையை எழுதி இருப்பதால் .இந்நூல படிக்கும் வாசகன் தனக்காக எழுதி உள்ளார் என்று எண்ணும் விதமாக உள்ளன .பாராட்டுக்கள் .
உழைப்பின் மேன்மையை மிக மென்மையாக உணர்த்தும் கவிதை நன்று .
உறங்கும் நேரம்
குறையக் குறைய
உழைக்கும் நேரம்
நிறைய நிறைய
ததும்பும் தங்க திரவம் – உன்
வெற்றிப் பாத்திரத்தில் !

தன்னம்பிக்கையாளன் எதையும் நாளை நாளை என்று நாளைத் தள்ள மாட்டன் .தாமதிக்க மாட்டன் என்பதை உணர்த்தும் கவிதை ஒன்று .
தாமதிப்பது என்பதுபோல்
கொடூர தற்கொலை எந்திரம்
தன்னம்பிக்கையாளனுக்கு
கிடைக்காது .

Please follow and like us:

You May Also Like

More From Author