பாஸ்கர் சக்தியின் ‘வடக்கன்’ தலைப்புக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு: ரிலீஸ் தள்ளிவைப்பு

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வடக்கன்’ திரைப்படம் வெளியாவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், வடக்கன் திரைப்படத்தின் தலைப்புக்கு சென்சார் போர்டு அனுமதி மறுத்துள்ளதால் படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிட இயலவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.

எழுத்தாளரும் கதை, வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தி, இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் குங்குமராஜ், வைரமாலா ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா என பலர் நடித்துள்ள இந்தப் படத்தை டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரித்துள்ளார்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வழங்கும் இப்படம் வரும் மே 24-ஆம் தேதி வெளியாக இருந்தது.

You May Also Like

More From Author