நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள “கருப்பு” திரைப்படத்தில் இருந்து ஆர்.ஜே. பாலாஜி விலகிவிட்டதாக பரவிய தகவலுக்கு, தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பின்னணி வேலைகளின் போது தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கும், ஆர்.ஜே. பாலாஜிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதனால் ஆர்.ஜே. பாலாஜி படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் ‘X’ (முன்னர் ட்விட்டர்) தளத்தில் தகவல் ஒன்று வேகமாகபரவியது.
கருப்பு படத்தில் இருந்து ஆர்.ஜே.பாலாஜி விலகலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்
