டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த  நபரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியின் ராஜிவ் சவுக் மற்றும் பட்டேல் நகர் மெட்ரோ நிலையங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகம் எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள சுவற்றில் வாசகம் எழுதி கொலை மிரட்டல் விடுத்த அங்கித் கோயல் என்பவரை போலீசார் கைது செய்தனர். மெட்ரோ ரயில் நிலைய சுவற்றில் அங்கித் கோயல், வாசகம் எழுதும்  வீடியோவையும் டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author