மயிலாடுதுறையில் உள்ள ஞானபுரீஷ்வரர் கோயிலில் “பார்வதி கல்யாணம்” என்ற கருப்பொருளில் பொம்மலாட்டம் நடைபெற்றது.
பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து 5 வயதிலேயே கானகம் சென்ற பார்வதி தேவி, தவத்தின் பலனாக சிவபெருமானை அடைந்த இந்த புராண வரலாற்றை, கலைமாமணி விருதாளர் சோமசுந்தரம், பொம்மலாட்டம் நிகழ்ச்சியின் வாயிலாக குழந்தைகளுக்கு தத்ரூபமாக வெளிக்காண்பித்தனர். இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.