சட்டவிரோதமாக தங்கள் நாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்களை நாடு கடத்துவதற்கு அமெரிக்கா சார்ட்டர்ட் விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளது.
இது இந்திய அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்புடன் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த வாடகை விமானம் அக்டோபர் 22ஆம் தேதி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) தெரிவித்துள்ளது.
“அமெரிக்காவில் தங்குவதற்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லாத இந்திய குடிமக்கள் விரைவாக அகற்றப்படுவார்கள்.
மேலும் புலம்பெயர்ந்தவர்கள் கடத்தல்காரர்களின் பொய்களை நம்பி அவர்களின் வலையில் மீண்டும் விழக்கூடாது.” என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி கிறிஸ்டி ஏ கனெகல்லோ கூறினார்.
இதுபோன்ற நாடு கடத்தல் நடவடிக்கை பல ஆண்டுகளாகவே இரு நாடுகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.