ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் 21 ஆண்டுகளுக்கு பின், புரவி எடுப்பு நிகழ்வு நடைபெற்றது.
சேமனூரில் அமைந்துள்ள மருதாருடைய அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும், ஆனி மாதம் திருவிழா நடைபெறுவது வாடிக்கை.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான திருவிழாவில் 21 ஆண்டுகளுக்கு பின், புரவி எடுப்பு நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் 15 நாட்கள் விரதமிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அம்மன் கோயிலுக்கு புரவிகளை சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.