வடகிழக்கு மாநில புயல் பாதிப்பு : மீட்பு, நிவாரணப்பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!

பிரதமர் மோடி தலைமையில் வடகிழக்கு மாநிலங்களில் புயலுக்குப் பிந்தைய நிலவரம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக  மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் புயலுக்குப் பிந்தைய நிலவரம் தொடர்பான ஆய்வு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, மீட்பு பணி மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இன்று 7 ஆலோசனை கூட்டங்களில் பிரதமர் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய அரசாங்கத்தின் முதல் 100 நாட்களுக்கான நிகழ்ச்சி நிரலை மறு ஆய்வு செய்வதற்கான ஆலோசனை உள்ளிட்ட கூட்டங்கள் நடைபெறுகிறது.

 

You May Also Like

More From Author