மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தில் பாலஸ்தீனப் பிரச்சினை பற்றிய கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
காசா பகுதியில் மோதலை வெகுவிரைவில் நிறுத்தி, பாலஸ்தீனப் பிரச்சினையை பன்முகங்களிலும் நியாயமாகவும் நிலையாகவும் தீர்ப்பதை முன்னேற்றும் குரல் எழுப்பப்பட்டது.
பாலஸ்தீனப் பிரச்சினை, மத்திய கிழக்குப் பிரச்சினையின் மையமாகும்.
சர்வதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், பாலஸ்தீன மக்களின் தேசிய சட்டப்பூர்வ உரிமையை மீட்பதை சீனா உறுதியுடன் ஆதரிக்கிறது. புதிய சுற்று பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் மூண்ட பிறகு, தூதாண்மை இணக்கம் உள்ளிட்ட வழிகளில் இரு தரப்பும் போர் நிறுத்துவதை சீனா முன்னேற்றி, ஹமாஸ் இயக்கமும், ஃபதாஹ் இயக்கமும் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்து, பாலஸ்தீனத்தின் பல்வேறு பிரிவுகள் உள்புற நல்லிணக்கத்தை நனவாக்கி, உள்புற ஒற்றுமையை வலுப்படுத்துவதை ஆதரிக்கிறது.
இவ்வாண்டின் ஜனவரி திங்கள், எகிப்து மற்றும் அரபு லீக்கின் செயலகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கூட்டறிக்கையை சீனா முறையே வெளியிட்டது.
இவ்வாண்டு மே திங்கள், மத்திய கிழக்கு நிலைமை பற்றிய கூட்டறிக்கையை சீனாவும் பிரான்ஸும் வெளியிட்டன. மே 30ஆம் நாள் சீனாவும் அரபு நாடுகளும் இக்கூட்டு அறிக்கையை வெளியிட்டன. பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்ப்பதை முன்னேற்றுவதற்கான சீனாவின் சிந்தனை தெளிவானது.
அதாவது, அவசர கடமையையும், நீண்டகால கொள்கையையும் இணைப்பதாகும்.
குறுகிய கால ரீதியில் பார்த்தால், ஐ.நா பாதுகாப்பவையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையைச் செயல்படுத்தி, பாலஸ்தீனமும் இஸ்ரேலும் போரை நிறுத்தி, மனித நேய நெருக்கடியைத் தணிவுபடுத்தி, மத்திய கிழக்குப் பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தை மோதல் பாதிக்காமல் தவிர்ப்பது மிக அவசர கடமையாகும். நீண்டகால ரீதியில் பார்த்தால். சர்வதேச சமூகம் கூட்டாக முயற்சி மேற்கொண்டு, 1967ஆம் ஆண்டு எல்லையை அடிப்படையாகவும், கிழக்கு ஜெருசலேமை தலைநகராகவும் கொண்ட, முழு அரசுரிமையை அனுபவிக்கும் சுதந்திர பாலஸ்தீன நாட்டை வெகுவிரைவில் நிறுவ வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுக்கிறது.
இரு நாடுகள் திட்டத்தை” உண்மையாக நனவாக்கினால், பாலஸ்தீன மக்களின் ஆசை நனவாக்கப்பட முடியும். இஸ்ரேலின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட முடியும். மத்திய கிழக்குப் பிரதேசத்தில் அமைதி நனவாக்கப்பட முடியும்.
பொறுப்புணர்வு கொன்ட வல்லரசான சீனா, அரபு நாடுகளுடன் இணைந்து நீதியை ஆதரித்து, பாலஸ்தீனமும் இஸ்ரேலும் நிபந்தனையின்றி போர் நிறுத்துவதை வெகுவிரைவில் விரைவுபடுத்தி, பாலஸ்தீனப் பிரச்சினையை வெகுவிரைவில் தீர்ப்பதைத் தொடர்ந்து முன்னேற்றும்.