சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில், சீன அறிவியல் கழகத்தின் மூத்த அறிஞரும், ட்சின்குவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான யௌ ச்சிஜூக்குப் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஷிச்சின்பிங் அவருக்கு இனிமையான வாழ்த்துக்களையும், ஆவலான எதிர்பார்ப்பையும் தெரிவித்துள்ளார்.
ஷிச்சின்பிங் கடிதத்தில் கூறுகையில்,
தாய்நாட்டுக்குத் திரும்பி பேராசிரியராக பதவி ஏற்று, மனப்பூர்வமான நாட்டுப்பற்றுணர்வுடன் பணியாற்றி வருகின்றீர்கள். ஆரம்பக் காலத்தில் இருந்த மனம் மற்றும் கடமையை நினைவில் வைக்க வேண்டும்.
சொந்த மேம்பாடுகளை வெளிக்காட்டி, புத்தாக்க தன்மை வாய்ந்த திறமைசாலிகளை வளர்க்கும் மாதிரியைத் தொடர்ந்து நாட வேண்டும். உயர் நிலை திறமைசாலி வளர்ச்சி மற்றும் தொழில் நுட்பப் புத்தாக்க தளத்தைக் கட்டியமைக்க வேண்டும்.
உயர் நிலை அறிவியல் தொழில் நுட்பத்தின் தற்சார்ப்பு மற்றும் தன்வலிமையை நனவாக்கி, கல்வி மற்றும் தொழில் நுட்ப வல்லரசைக் கட்டியமைப்பதற்கு புதிய பங்காற்ற வேண்டும் என்றார் அவர்.