அருணாச்சல பிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது.
இதில், சிக்கிமில் ஆளும் SKM மற்றும் SDF இடையே போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.
அருணாச்சல பிரதேசத்தில், காங்கிரஸுக்கு எதிராக பா.ஜ.க போட்டியாக உள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பகால போக்குகளின்படி, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 60 இடங்களில் பாஜக 18 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
அதில் அக்கட்சி ஏற்கனவே போட்டியின்றி 10 இடங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அருணாச்சல பிரதேசத்தில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
இதற்கிடையில் சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) 4 இடங்களிலும், சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎஃப்) மற்றும் பாஜக தலா ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளன.