சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
Category: சீனா
CMG News
வங்காளத்தேசத்தின் தற்காலிக அரசு பற்றிய சீனாவின் கருத்து
வங்காளத்தேசத்தில் தற்காலிக அரசு அமைக்கப்பட்டுள்ளது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 9ஆம் நாள் செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர், வங்காளத்தேசத்தில் [மேலும்…]
ஜூலை மாத சீனாவின் சி.பி.ஐ. மற்றும் பி.பி.ஐ. குறியீடு வெளியீடு
2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சீனாவின் நுகர்வோர் விலைக் குறியீடு(CPI) மற்றும் உற்பத்தியாளர் விலைக் குறியீட்டை(PPI) சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் ஆகஸ்ட் 9 [மேலும்…]
பெருமளவில் ஊக்கமருந்துகளை எடுப்பதற்கு அமெரிக்கா பதில் அளிக்க வேண்டும்
2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பாதியளவான போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் செய்திஊடகம் மற்றும் நிறுவனங்கள், பிற நாட்டு விளையாட்டு [மேலும்…]
சீனச் சீர்திருத்தம் ஏற்படுத்தும் சீன வளர்ச்சியும் உலக வாய்ப்பும்
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வு அண்மையில் பெய்ஜிங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது. கடந்த 46 ஆண்டுகளாக சீர்திருத்தம் மற்றும் [மேலும்…]
அமெரிக்க தேசிய ஜனநாயக நிதியத்தின் உண்மையான முகம்
“அமெரிக்க தேசிய ஜனநாயக நிதியத்தின் செயல் மற்றும் உண்மையான முகம் பற்றிய அறிக்கையைச் சீன வெளியுறவு அமைச்சகம் ஆகஸ்டு 9ஆம் நாள் வெளியிட்டது.அமெரிக்கத் தேசிய [மேலும்…]
ஐ.நா. பொது பேரவையின் தீர்மானம் பற்றிய அமெரிக்காவின் விளக்கம் மோசடி தான்
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில், தைவான் பற்றிய மசோதா ஒன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐ.நாவில் ஒரேஒரு சட்டப்பூர்வ பிரதிநிதி சீன மக்கள் குடியரசு என்பது [மேலும்…]
பாரிஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்க தடகள விளையாட்டு வீரர்கள் மீது ஊக்கமருந்து சோதனையை அதிகரிக்க வேண்டுகோள்
தடகள விளையாட்டுக்களில் அமெரிக்கா ஏற்படுத்திய பல களங்கங்களைக் கருத்தில் கொண்டு, பாரிஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்க தடகள விளையாட்டு வீரர்கள் மீதான ஊக்கமருந்து சோதனையை சர்வதேச [மேலும்…]
அமெரிக்காவில் தடைக்குப் புறம்பானவர் போட்டியில் தொடர்ந்து கலந்துகொள்தல்:உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு
உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு ஆகஸ்ட் 7ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளில், ஊக்கமருந்துகளை எடுத்துக் கொண்ட வீரர்கள் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள [மேலும்…]
49 கிரோகிராம் மகளிர் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சீனா
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 49 கிரோகிராம் மகளிர் பளுதூக்கும் போட்டியில், சீன வீராங்கனை ஹோ ட்சுஹுவெய் ஸ்னாட்ச் முறையில் 89 கிரோகிராம், கிளீன் மற்றும் [மேலும்…]
உலகிற்குப் பல நன்மைகளைக் கொண்டு வரும் சீன வெளிநாட்டு வர்த்தகம்
ஆகஸ்டு 7ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின் படி இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில் சீனச் சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 24 [மேலும்…]
