சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வு அண்மையில் பெய்ஜிங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது. கடந்த 46 ஆண்டுகளாக சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியில் சீனா மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது.
சீனாவின் வெற்றி, நவீனமயமாக்கத்தில் சிக்கல்களைத் தீர்க்க உலகிற்கு மதிப்புமிக்க அனுபவங்களை வழங்கியுள்ளது என்று பல நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நிபுணர்கள், அறிஞர்கள் மற்றும் மூத்த செய்தி ஊடக வட்டாரத்தினர் ஆக்கப்பூர்வமாகப் பாராட்டினர்.
சீனப் பாணி நவீனமயமாக்கம், நவீனமயமாக்கத்தில் சிக்கல்களை வளரும் நாடுகள் தீர்க்கும் “தங்கச் சாவியாக” மாறியுள்ளது என்று வங்காளத்தேசத்தின் டாக்கா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச உறவு கல்லூரியின் பேராசிரியர் ஒபாய்தூர் ஹூக் தெரிவித்தார்.
மனிதகுல வரலாற்றிலேயே மிகப்பெரிய, மிக நீண்டகால மற்றும் ஆகப்பெரும் மக்கள்தொகை வறுமைக் ஒழிப்பு அதிசயத்தை சீனா உருவாக்கியுள்ளது என்று துருக்கியின் மர்மரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் அறிவியல் பேராசிரியர் பாலேஷ் டோஸ்டெல் தெரிவித்தார்.