ஒன்றுக்கு ஒன்று நன்மை அளிக்கும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை : புதின்

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் சமீபத்தில் மாஸ்கோவில் சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த செய்தியாளருக்கு சிறப்பு நேர்காணல் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், பட்டுப் பாதைப் பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆம் நூற்றாண்டு கடல்வழி பட்டுப் பாதை என்ற முன்மொழிவு, யூரேசிய பொருளாதார ஒன்றியம் பற்றிய ரஷியாவின் முன்னெடுப்பு ஆகிய இரண்டும் முற்றிலும் பொருத்தமானது. அவற்றில் பங்கேற்கும் நாடுகள், ஒன்றுக்கு ஒன்று நன்மை தந்து பயனடையும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
சீனாவினால் முன்வைக்கப்பட்ட ஒத்துழைப்புக் கருத்திற்கு ஒரு முக்கிய சாதகம் உண்டு. அதாவது, ஒத்துழைப்புக் கட்டுக்கோப்புக்குள், பிறர் மீது எந்த விடயத்தையும் கட்டாயப்படுத்துவதில்லை. அதோடு, அனைத்துப் பணிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தீர்வு காணப்படும். அது மட்டுமல்லாமல், ஒரே இலக்கை நனவாக்கும் வகையில் பல்வேறு தரப்புகளால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய செயல்திட்டம் மற்றும் வழிமுறை ஆகியவையும் தேடப்படும். இது, தற்போதைய கட்டத்தில் ஷிச்சின்பிங்கின் தலைமையில், சீனா பிற நாடுகளுடன் தொடர்பு கொள்வதில் உள்ள சிறப்பம்சம் ஆகும். ஒரு தரப்பு மற்ற தரப்பு மீது அழுத்தத்தைத் திணிக்காமல், எதையும் கட்டாயப்படுத்தாமல், உரிய வாயப்புகள் வழங்கப்படும். சிரமங்கள் இருந்தாலும், இதற்கு தீர்வு காண முனைப்புடன் செயல்படும் என்று புதின் கூறினார்.
பலதுருவ உலகம் உருவாகி வருகிறது. ஷிச்சின்பிங் முன்வைத்த கருத்துகளும் முன்மொழிவுகளும் நடைமுறைக்கு ஏற்ற முக்கியத்துவம் வாய்ந்தவை. மனிதகுலத்திற்கு பகிர்வு எதிர்காலம் கொண்ட சமூகம் என்ற கருத்தை ஷிச்சின்பிங் 2013ஆம் ஆண்டு முன்வைத்தார். தற்போது, இந்த கருத்து நடைமுறைக்கு வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, பட்டுப் பாதைப் பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆம் நூற்றாண்டு கடல்வழி பட்டுப் பாதை முன்மொழிவை அவர் வழங்கினார்.

இந்த முன்மொழிவு, மனிதகுலத்திற்கு பகிர்வு எதிர்காலத்தை வழங்குவதற்குரிய சமூகத்தின் நடைமுறையாகும். பிரச்சினையின் சாராம்சத்தைப் புரிந்துக் கொண்ட பிறகு, சீனா தொடர்ச்சியான கொள்கைகளைப் பின்பற்றி, கூட்டு இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author