சீனக் கப்பல் பணியாளர் இந்தியக் கடற்படையால் மீட்டெடுக்கப்பட்டார்

அண்மையில், மும்பைக்கு அருகிலான கடல் பரப்பில் காயமுற்ற சீனக் கப்பல் பணியாளர் ஒருவரை, இந்தியக் கடற்படை மற்றும் கடலோர காவல்படை மீட்டெடுத்து, அவரை மருத்துவமனைக்கு அனுப்பின.


இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் கூறுகையில், இந்தக் கப்பல் பணியாளர் இந்திய தரப்பால் காலதாமதமின்றி மீட்டெடுக்கப்பட்டு, தற்போது சீனாவுக்குத் திரும்பியுள்ளார்.

பல்வேறு இன்னல்களைச் சமாளித்து மனித நேய உதவியை மேற்கொண்ட இந்தியாவின் தொடர்புடைய வாரியங்கள் மற்றும் பணியாளர்களுக்கு சீனா மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறது என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author